இலங்கையில் 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது உயிர்நீத்த உறவுகளுக்காக பிரித்தானியப் பிரதமர் இல்லத்திற்கு முன்பு ஒன்று கூடி தமிழர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வு, தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், பெருமளவான பிரித்தானியத் தமிழர்கள் பங்குகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், புலிக் கொடி ஏந்திய வண்ணம் தமிழ் இனப்படுகொலைக்காக நீதிகோரி நின்றனர்.
இதேவேளை, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு மிகப்பெரும் வரலாற்றுக் கடமை உள்ளது.
நாம் அனைவரும் ஒன்றாக சர்வதேசத்தின் மனச்சாட்சியைத் தட்டுவோம். எமக்கான நீதியையும் உரிமையையும் பெறும் வரை ஓயக்கூடாது என்று அங்கு திரண்ட பிரித்தானியா தமிழர்கள் குறிப்பிட்டுள்ளனர்.