கடந்த வெள்ளிக்கிழமை கருணாநிதியின் உடலில் பின்னடைவு ஏற்பட்டு அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பின்னடைவு ஏற்பட்டது.
5 முதல் 7 நிமிடங்களுக்கு அவரது இதயம் திடீரென நின்றுவிட்டதாகவும், அதற்கு முன்பு அவரது நாடித்துடிப்பு 20 முதல் 30 அளவுக்கும், ரத்த அழுத்தம் 40/ 60 என்ற அளவிலும் குறைந்தது.இதனால், குடும்ப உறுப்பினர்கள் வரவழைக்கப்பட்டு அனைவரும் துயரம் தாங்காமல் அழுது, கருணாநிதியின் காலை தொட்டு வணங்கினர்.
அதே நேரத்தில், கருணாநிதியின் இதயத்தில் உடனடியாக மசாஜ் செய்தபோதுதான், நின்றுபோன இதயம் இயங்க தொடங்கி, செயலற்று கிடந்த கருணாநிதியின் கை, கால்கள் லேசாக அசைய தொடங்கியது.
மேலும், ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவுக்கும், நாடித்துடிப்பு 40க்கு மேலும் படிப்படியாக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து 30 நிமிடத்தில் அவரது உடல்நிலை சீரானது. உடலில் பாதிக்கப்பட்டுள்ள உறுப்புகள் சீராக இயங்குவதற்கு தேவையான சிறப்பு மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து தொடர் சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளனர்.