ஆந்திராவில் பிரசவத்துக்காக 12 கி.மீ., கர்ப்பிணியை தூக்கி சென்ற பரிதாபம் ஆரங் கேறியுள்ளது. இதனால் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் விஜய நகரத்தை சேர்ந்தவர் ஜிந்தாமா (22). பழங்குடியினரான இவர் 8 மாத கர்ப்பிணி.
காட்டின் நடுப்பகுதியில் வசிக்கும் இவர் குடியிருக்கும் பகுதியில் மருத்துவ வசதிகள் கிடையாது.
சாலை வசதிகளும் இல்லை. இந்நிலையில் ஜிந்தாமாவிற்கு திடீரென வலி ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வசதி உள்ள இடத்துக்கு செல்ல 12 கி.மீ செல்ல வேண்டும். இதனால் ஜிந்தாமாவை மூங்கிலில் கையால் செய்யப்பட்ட டோலியில் கொண்டு செல்ல அவரின் கணவர் முடிவு செய்தார்.
ஆனால் கொண்டு செல்லும் வழியில் ஜிந்தாமாவுக்கு வலி அதிகரித்ததால், அங்கேயே நிறுத்தினர். ஜிந்தாமாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால் ஆம்புலன்ஸூக்கு செல்வதற்குள் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதன் பின் ஜிந்தாமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரை டோலியில் தூக்கி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.